விஜேதா குமார்
*****
2019ம் ஆண்டு, பல புத்தாயிர வியப்புகளைக் கொண்டது. இந்த ஆண்டில்தான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தானியங்கி வாகனத் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு, ஓலா/ஊபரைச் சார்ந்திருக்கும் புத்தாயிர இளைஞர்களைக் குற்றம் சாட்டினார். இதே ஆண்டில்தான் புத்தாயிர இளைஞர்கள் (2000க்குப் பின் பிறந்த Millennials) முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு, அரசியல் உணர்ச்சியைக் காட்டுவதற்கு, உணர்ச்சியற்றிருக்காமல் செயல்படுவதற்கு, மிக முக்கியமாக, மனநலப் பிரச்னைகள்மீதிருந்த களங்கத்தை நீக்கியதற்குப் பாராட்டப்படுகிறார்கள்.
அதேசமயம், ஒரு விஷயம் தெளிவாக இல்லை: புத்தாயிர இளைஞர்கள் என்றால் யார்? அந்தச் சொல்லைக் கேட்கும்போது நாம் யாரைக் கற்பனை செய்துகொள்கிறோம்? இந்தியாவில் ‘புத்தாயிரம்’ என்ற சொல், ‘வயதுவருதல்’ மற்றும் ‘மனநலப் பிரச்னை’ ஆகிய சொற்களைப்போல் ஓர் ஆபத்தான பகுதிக்குள் நுழையவுள்ளது; இங்கு சொற்களுக்கும் கருத்தாக்கங்களுக்கும் பூசி மெழுகப்படுகின்றன, அதன்பிறகுதான் அவற்றைப் பிறரால் அதிகம் அணுகக்கூடிய வகையில் பயன்படுத்த இயலுகிறது. இங்கு நாம் புத்தாயிர இளைஞர்கள் என்று சொல்லும்போது, உண்மையில் ஆங்கிலம் பேசுகிற, அரசியல்ரீதியில் சரியான சிந்தனைகளைக் கொண்டிருக்கிற ஆதிக்கச் சாதியினருடைய கூட்டத்தைத்தான் குறிப்பிடுகிறோமா?
அப்படியானால், தலித் புத்தாயிர இளைஞர்கள் எங்கே? மற்ற புத்தாயிர இளைஞர்களைப்போல் அவர்களும் மனநலப் பிரச்னைகளைப்பற்றி மனம் திறந்து பேசுகிறார்களா? மற்றவர்களைப்போலவே அவர்களுக்கும் மனநலப் பிரச்னைகள் வருகின்றனவா? இதற்கு விடை தேடி நாம் உளவியலையும் அதன் பயன்பாட்டையும் பார்த்தோமென்றால், நமக்கு அங்கு பல பதில்கள் இல்லை.
8 ஆண்டுகளுக்குமுன்னால், நான் ஒரு மாணவராக இருந்தபோது எனக்குத் தெரிந்திருந்த உளவியலுக்கும், இப்போது நான் மாணவர்கள்வழியாகத் தெரிந்துகொள்கிற உளவியலுக்கும் இடையே பெரிய வேறுபாடு இல்லை. இன்றைக்கு எனக்குத் தெரிகிற ஒரே வேறுபாடு, மனநலப் பிரச்னையைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலையாக ஆக்குவதில் வளர்ந்துவருகிற ஆர்வம்தான். நாட்டின் இயல்பு நிலையாகச் சாதி அமைவதைக் கையாள்வதற்காக, துடிப்பு அதிகமற்ற மந்தமான எதிர்ப்பின்மூலம் இது செய்யப்படுகிறது.
உளவியல் ஆலோசனைகளின்போதும், பல நேரங்களில் வகுப்பறைகளிலும், சாதிக்கான நுண்ணுணர்வானது ‘சமூகப்-பொருளாதார’ப் பின்னணிகளுடைய திரைக்குப் பின்னால் ஒளித்துவைக்கப்படுகிறது, போகிறபோக்கில் சொல்லப்படுகிறது; இங்கு சாதியானது எளிதில் வகுப்பாக உருப்பெற்றுவிடக்கூடும்.
இந்தக் கட்டுரை சரியாகச் சுட்டிக்காட்டுவதுபோல், “சாதி என்பது பலவிதங்களில் இயங்கிவருகிறது, (இந்த) அமைப்புகளில் அதை அன்றாடம் காண இயலுகிறது. இதை விதிமுறைகள், கட்டுப்பாடுகளால் அதிகம் தடுக்க இயலுவதில்லை.”
சாதி அடிப்படையிலான பாரபட்சம் பழங்கதையாகிவிட்டது, இப்போதெல்லாம் வகுப்புவாதம்தான் உண்மையான பிரச்னை என்கிற பேச்சு நகர்ப்புற வகுப்பறைகளில் நஞ்சாகப் பரவியுள்ளது. பல நேரங்களில், இந்த வாதிடல்களில் சாதிபற்றிய பேச்சு நுழைகிற ஒரே நேரம், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வலுவான உணர்வுகளை வெளிப்படுத்தவேண்டியிருக்கும்போதுதான்.
ஆக, மனநலப் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள உண்மையில் நமக்குக் கிடைப்பது, சாதியை நேருக்கு நேர் பாக்கும் முதுகெலும்பு இல்லாத ஒரு மேற்கத்தியக் கையேடாகும். கல்வித்துறையில் இப்போது பின்பற்றப்படுவதாகத் தோன்றுகிற உளவியல் மற்றும் ஆலோசனை வழங்குதலின் பிரச்னை என்னவென்றால், அவர்கள் அதை (வகுப்பறைகளில், விரிவுரைகளில், பணிவாழ்க்கைகளில்) ஓர் அறிவியலாக ஆவேசத்துடன் சந்தைப்படுத்துவதுதான்.
மனநலப் பிரச்னைகளை ஒரு ‘பொதுவான’ பிரச்னையாக விவரிக்கும் முயற்சி தொடர்ந்து நடந்துவருகிறது; சமூக எதார்த்தங்களால் உண்டாகக்கூடிய ஒன்றாக அதை அடையாளம் காண்பதுபற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. இந்தியா என்று வரும்போது, சாதி என்கிற எதார்த்தத்தைவிடப் பெரிய வேறு சமூக எதார்த்தம் ஏதாவது இங்கு இருக்கிறதா?
நகரத்துத் தலித் மாணவர்கள் சில நேரங்களில் தங்களுடைய அடையாளத்தை அறியாமல் வளர்கிறார்கள்; ஆனால், தங்களைப்பற்றியும், தங்களைப் பிறர் நடத்தும் விதத்தைப்பற்றியும், அதில் ஏதோ பெரிய தவறு இருக்கிறது என்கிற ஐயம் அவர்களுக்கு எப்போதும் இருக்கிறது. அம்பேத்கரைக் கண்டறிகிற, அல்லது, அம்பேத்கரைப் பின்பற்றும் நண்பர்களைக் கொண்டிருக்கிற அதிர்ஷ்டம் அவர்களுக்கு இருந்தால், தோற்றுப்போன அனைத்து நட்புகளும், சேற்றை வாரி இறைத்த நிகழ்வுகளும், கடந்தகாலத்தின் பதற்றங்களும் திடீரென்று தெளிவாகின்றன. பல நேரங்களில், தான் இப்போது இருக்கும் இடத்துக்குத் தான் தகுதியானவர் இல்லை என்று பிறரால் உணரச்செய்யப்பட்டபிறகுதான் ஒரு நகர்ப்புறத் தலித் தன்னுடைய அடையாளத்தைத் தெரிந்துகொள்கிறார்; இந்தச் செய்தியை அவர்களுக்குக் கொண்டுவருகிறவர்கள் எப்போதும் ‘சாதி இந்து’க்களாகவே (https://en.wikipedia.org/wiki/Varna_(Hinduism)) இருக்கிறார்கள்.
மற்றவர்களுடன் ஒரே வகுப்பறையில் அமர்ந்திருக்கிற ஒரு தலித் மாணவர், இதுதான் தன்னுடைய மனநலப் பிரச்னை என்று உணர்ந்தால், ஆலோசனை வழங்குதலைப்பற்றிய எந்த விவரிப்புக்கு அதைப் புரிந்துகொள்ளும் திறமை உண்டு? அதே நேரம், ஒரு சாதி இந்து மாணவர் தான் மனச்சோர்வு அடைந்திருப்பதுடன், அதை அடையும் உரிமையும் தனக்குண்டு என்று நம்பும்படி வழிநடத்தப்பட்டால், இந்த உரிமை எப்போதெல்லாம் சாதிச் சலுகையை எதிர்கொள்ளச்செய்யப்படுகிறது?
கல்வித்துறையிலுள்ள உளவியலாளர்கள்/ஆலோசகர்களிடம் இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை; அதைவிட மோசம், அவர்கள் இதைக் கேட்கவேண்டும் என்ற அக்கறைகூட அவர்களுக்கு இல்லை. இவ்வளவு விஷயங்களை அவர்களால் புரிந்துகொள்ளக்கூட இயலாது. மக்களைச் சமநிலைப்படுத்துவது அல்லது அப்படிப்பட்ட ஒரு மாயத்தோற்றத்தையாவது உண்டாக்குவது என்கிற விவரிப்பு எதற்கேனும் தரப்பட்டிருக்கிறது என்றால், அது ‘மன நலப் பிரச்னை’க்குதான். அதன் பார்வையில், எல்லாரும் சமம்.
***
ட்ரெவர் நோவாவுடனான Daily Show என்ற அன்றாட நிகழ்ச்சியில், ஓர் ஆப்பிரிக்கச் சிறுமிக்கு மனச்சோர்வு இருக்கிறது என்பதை அவருக்குப் புரியவைக்க முயன்ற நிகழ்வைப்பற்றி நமக்குச் சொல்கிறார் ஓபரா. ஆனால், அந்தப் பெண் அதை ஏற்றுக்கொள்ளவில்லை, “எனக்கு மனச்சோர்வு வந்திருக்க வாய்ப்பில்லை; நான் ஆப்பிரிக்கன் அல்லவா?” ஆப்பிரிக்கப் பெண்களுக்கும் மனச்சோர்வு வரலாம் என்பதை அவர்களுக்குப் புரியவைக்கத் தான் முயன்றதாகப் பின்னர் குறிப்பிட்டார் ஓபரா.
இதைப் பார்த்தபோது, என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த மூத்த பெண்களைப் புரிந்துகொள்ள ஒரு மொழி எனக்குக் கிடைத்தது. இங்கு நாம் சொல்லவரும் விஷயம், நாமும் மனச்சோர்வை அடையலாம் என்பதில்லை. என்னுடைய குடும்பத்திலிருக்கிற மூத்த பெண்கள் அவர்களுடனே நீண்ட சண்டைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள், நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள், தங்களைச் சுற்றியுள்ள உலகத்துடன் இன்னும் நீண்ட சண்டைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள், நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
இத்தனைக்கும், இதையெல்லாம் அவர்களுக்கு யாரும் விளக்கவேண்டியிருக்கவில்லை, நுணுக்கமாகச் சொல்லிக்கொடுக்கவேண்டியிருக்கவில்லை. சொல்லப்போனால், விளக்குதல், நுண்ணுணர்வுகள் போன்றவையே எல்லாரும் பாராட்டுகிற சாதி இந்துச் சொற்கள்தாம். இவையெல்லாம் இல்லாமலேயே அவர்கள் இந்தச் சண்டைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதை நாம் அங்கீகரிக்கவேண்டும். இதைத்தான் நான் இங்கு முக்கியமாகக் கருதுகிறேன்.
தலித் பெண்களால் மன நல வல்லுனர்களை அணுக இயலுவதில்லை என்பது அறிவுக்கு மிகவும் ஏற்புடைய ஒரு தகவலாக இருந்தாலும், நாம் அதையும் முன்வைத்து வாதிடவில்லை; சாதி இந்துக்களுடைய ஓர் உலகில் எந்த அளவு மனநலனும் தங்களைக் காப்பாற்றாது என்பதைத் தெரிந்துகொண்டபிறகு, அல்லது, அதைத் தெரிந்துகொண்டதன்மூலம் ஏற்படுகிற மௌனத்தைத் தலித் பெண்கள் தாங்கிக்கொண்டு முன்னேறுகிறார்கள் என்பதைத்தான் நாம் பேசுகிறோம். நாம் இதுவரை பேசியவற்றிலிருந்து கற்கவேண்டிய பாடம், நீங்கள் ஒரு சாதி இந்து உலகில் வாழ்கிறீர்கள் என்றால், நீங்கள் ஏற்கெனவே இயல்பாக மனநலப் பிரச்னை கொண்டவர் என்பதைப் புரிந்துகொள்வதுதான், நீங்கள் சாதி இந்துவாக இருந்தாலும் சரி, சூத்திரராக இருந்தாலும் சரி, தலித்தாக இருந்தாலும் சரி, இது உண்மை.
இதற்கு எந்த ஆலோசனை அல்லது சிகிச்சை உதவலாம்?
உங்களுடைய வேலையை இன்னொருவர் செய்வார், அதற்காக நீங்கள் பணம் செலுத்தவேண்டும், அத்துடன் மருந்துகளையும் உட்கொள்ளவேண்டும் என்று நம்புவது சாதி இந்துக்களுடைய பலமுறை நிரூபிக்கப்பட்ட செயல்முறையாகும்.
‘நான் மனச்சோர்வு அடைய இயலாது. ஏனெனில், நான் ஒரு தலித்’ என்ற சொற்றொடரைத் திருத்தவேண்டியதில்லை, தூசுதட்டிப் பெருமையுடன் அணியவேண்டியது என்று என்னுடைய சாதியைச் சேர்ந்த பெண்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டுள்ளேன்.
என்னுடைய தந்தையுடைய வளர் இளமைப் பருவமும் இந்தவிதமாகதான் கையாளப்பட்டது. உள்ளே மிக ஆழமாக விழுந்துவிடாமல் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதிலேயே தன்னுடைய மாணவப் பருவத்தின் பெரும்பாலான நாட்களைச் செலவிட்டார் அவர்.
ஒருவர் தன்னுடைய இளமைப்பருவம் முழுவதையும் கவனமாகப் பேசுவதில், பிறரைக் காயப்படுத்திவிடக்கூடாது, தன்மீது கவனத்தை ஈர்த்துவிடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருப்பதில், தன்னுடைய உணவு எங்கிருந்து வரப்போகிறது என்று சிந்திப்பதிலேயே செலவிட்டால், மனச்சோர்வுக்கு நேரம் இருப்பதில்லை. தான் கொல்லப்பட்டுவிடக்கூடாது, நசுக்கப்பட்டுவிடக்கூடாது, ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாது என்பதிலேயே ஒருவருடைய கவனம் முழுவதும் இருந்தால், அதுவே அவருடைய மனச்சோர்வாகிவிடுகிறது.
நான் வளர்ந்துகொண்டிருந்தபோது, என்னுடைய தந்தை என்னுடைய மனநிலைகளை எரிச்சலுடன் கவனித்தார்; நான் நன்றியுணர்வைக் காட்டாமல் உணவை உண்டால்கூட மிகவும் சினம் கொண்டார். தான் வளர்ந்தபோது தனக்குக் கிடைக்காத அனைத்தையும் அவர் எங்களுடைய வீட்டில் நிரப்பினார்; அதேசமயம், எங்களைச் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிடக்கூடாது என்பதில் கூடுதல் அக்கறை காட்டினார். அவர் தொடர்ச்சியாக, சில நேரங்களில் தீவிரத்துடன், அதாவது நாங்கள் எப்படி அமர்கிறோம், தூங்குகிறோம், சாப்பிடுகிறோம், பல் துலக்குகிறோம், படிக்கிறோம் போன்ற எங்களுடைய பழக்க வழக்கங்களில் எங்களுடைய கவனத்தை மீண்டும் செலுத்தும்படி கூறுவார்.
தலித் குழந்தைவளர்ப்பு என்பது அதிகம் ஆராயப்படாத ஒரு விஷயம். தங்களுடைய குழந்தைகளை மனச்சோர்வு/பதற்றம் கொண்டவர்களாகவும், அதைச் சரிசெய்யவே இயலாது என்றும் நம்பச்செய்வதில் தீவிரமாக இருக்கிற ஓர் உலகத்தில் குழந்தைகளை வளர்ப்பது தலித் பெற்றோருக்கு அச்சம் தருவதாக இருக்கவேண்டும். அவர்கள் நகரங்களுக்கு வரும்போது, பல நேரங்களில் அவர்கள் பின்பற்றுவதற்கு முன்னோடிகள் இல்லை, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் என்ன சொல்வது, பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களில் எப்படி நடந்துகொள்வது, உங்கள் குழந்தை எப்போதும் சோகமாகத் தோன்றினால் அவரை எங்கு அழைத்துச்செல்வது போன்றவற்றைச் சொல்லித்தருகிற பாடப்புத்தகமோ கையேடோ அவர்களுக்குக் கிடைப்பதில்லை.
அவர்கள் செய்யக்கூடிய ஒரே விஷயம், சாதி இந்துக்கள் எப்படிக் குழந்தைகளை வளர்க்கிறார்கள் என்பதைப் பார்த்துப் பிரதியெடுப்பதுதான். அவர்களால் அதைச் செய்ய இயலாதபோது, அவர்கள் உள்ளுணர்வைதான் நம்பவேண்டும் (பெரும்பாலான குழந்தைவளர்ப்புகளில் இது உண்மை). ஆனால், இது அச்சம் தருகிற ஒரு விஷயம். ஏனெனில், அவர்கள் நம்மைப் போட்டியிடாமலிருக்கத் தயார்செய்கிறார்கள், சாதி இந்துக்களுடைய உலகத்தில் நாம் தப்பிப்பிழைத்தாலே போதும் என்று சொல்லித்தருகிறார்கள். இதற்காக அவர்கள் நம்மைச் சாதியிலிருந்து மறைத்துப் பாதுகாக்கிறார்கள். நாம் யார் என்பதையோ, நாம் யார் என்று உலகம் நினைக்கிறது என்பதையோ அவர்கள் நமக்குச் சொல்லமாட்டார்கள். தங்களுடைய மிகச்சிறந்த வடிவத்தை அவர்கள் நமக்குத் தருகிறார்கள், உலகமும் அதேபோல் தரும் என்று வேண்டிக்கொள்கிறார்கள்.
***
ஒரு பிராமணப் பூசாரி என்னுடைய பாட்டியின் கையில் தன்னுடைய ஆள்காட்டி விரலால் குத்திச் சில மந்திரங்களைச் சொன்னாராம்; உடனே நாங்கள் GSB (கௌட் சரஸ்வத் பிராமணர்) ஆகிவிட்டோமாம். இதைச் சொல்லும்போது என்னுடைய பாட்டி சிரிப்பதில்லை. அவருடைய கணவர், தான் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பாக, அவர்களுடைய படுக்கையறைச் சுவரில் தன்னுடைய மரணத் தேதியை எழுதியதாகச் சொல்வார் என்னுடைய பாட்டி. அப்போதும் அவர் சிரிப்பதில்லை. உண்மையில், நான் அவரை அறிந்திருந்த காலகட்டம் முழுவதும், தான் உண்மையாக நம்பாத எதையும் அவர் சொன்னதில்லை.
ஆனால், சென்ற வாரம் என்னுடைய பாட்டி எங்களுடன் வாழ வந்தபோது, என்னுடைய பாட்டிக்கு மனநிலை சரியில்லை என்று என் தாய் என்னிடம் சொன்னார். அவர் மணிக்கணக்காகத் தனக்குத்தானே பேசிக்கொள்கிறாராம், கை நிறையச் சர்க்கரையை எடுத்துக்கொண்டு ஒவ்வோர் அறையாகச் செல்கிறாராம், தண்ணீர் குடிப்பதுபோல் அதைச் சாப்பிடுகிறாராம், மருந்து சாப்பிட்டுவிட்டதாகப் பொய் சொல்கிறாராம், மக்கள் தன்னுடைய பணத்தைத் திருடியதாகவும், அதே நேரத்தில் கடன் வாங்கியதாகவும் சொல்கிறாராம், இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று மாற்றாகச் சொல்லக்கூடியவை என்று நினைக்கிறாராம்.
‘மனச்சோர்வு வந்தவர்கள் அப்படிதான் நடந்துகொள்வார்கள்’ என்கிறார் என்னுடைய தாய்.
என்னுடைய பாட்டி தனக்குத்தானே என்ன பேசிக்கொள்கிறார் என்று நான் என்னுடைய தாயைக் கேட்டேன். வயதான உறவினர்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், கணவர் போன்றோரைப்பற்றிக் கிசுகிசுப்பாகத் திட்டுகிறாராம்; அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்கிறாராம். பின்னர், அவர் ஒரு தாமதமான முன்னுரையையும் சேர்த்துக்கொண்டார், “அவர் மிகவும் கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார். அப்பா வாழும்போதும் சரி, அப்பா இறந்தபிறகும் சரி. அவர் எங்களைத் தனியாகதான் வளர்த்தார்.”
என்னுடைய பாட்டி இப்படி நடந்துகொள்வதற்கு எந்த மருந்தும் இல்லை என்பதைத் தனக்கும் எனக்கும் நினைவுபடுத்திக்கொள்வதற்கான என் தாயுடைய வழி அது.
வேறோரிடத்தில், சாதி எப்படி நம்முடைய உடல்களில் வாழ்கிறது, என்ன செய்கிறது என்பதைப்பற்றி நான் எழுதியுள்ளேன். மனச்சோர்வைப்போலவே, இதுவும் இதன் அறிகுறிகளும் தகுதிபெற்ற ஒரு கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால், மனச்சோர்வைப்போல் சாதியைக் கையாள்வதற்குச் சிகிச்சையாளர் இல்லை; மருந்துகளைப் பரிந்துரைக்க இயலாது.
என்னுடைய பாட்டி கோயில்களுக்குச் செல்லவேண்டும் என்று மிகவும் விரும்பியிருப்பார், ஆனால், அவருக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்காது, இதை என்னுடைய பாட்டி ஒப்புக்கொள்ளமாட்டார். அதற்குப்பதிலாக, “நிலைமை இப்போது எவ்வளவோ மாறிவிட்டது” என்பார் அவர். ஒருகாலத்தில் அவருடைய மாமியார் கோயிலுக்குச் சென்றபோது, பூசாரிகள் தலைமுடியைப் பிடித்து இழுத்து வெளியேற்றினார்கள், அவர் கோயிலுக்கு அருகில் வந்தாலே கல்லால் அடிப்பதற்காக மக்கள் காத்து நின்றார்கள் என்பார். இப்போது நிலைமை அப்படியில்லை என்றும், அதற்காகத் தான் நன்றியுடன் இருப்பதாகவும் அவர் சொல்வார்.
என்னுடைய மாணவர்கள் சிலர், தாங்கள் தலித் என்பதை மெல்லக் கண்டுகொள்கிறார்கள், அந்த அதிர்ச்சியைக் கையாள்வது அவர்களுக்கு மிகக் கடினமாக இருக்கிறது. ஒரு நல்ல வாழ்க்கையை அனுபவிப்பதை எண்ணி அவர்கள் குற்றவுணர்ச்சி அடைகிறார்கள்; இதைத் தெரிந்துகொண்டதன்மூலம், தங்களைவிட அதிகத் துன்பத்தை அனுபவிக்கும் தலித் மக்களைப்பற்றி அவர்கள் எந்நேரமும் சிந்திக்கிறார்கள், தாங்கள் எதற்கும் தகுதியற்றவர்கள் என்று இது அவர்களை உணரச்செய்கிறது.
உங்களைவிடக் கருணைக்கு அதிகத் தகுதியுள்ள ஒருவர் எப்போதும் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் வாழ்ந்தால், அது ஒருவிதமான அதிர்ச்சியாகிறது; சாதி என்று சொன்னாலே, அத்துடன் ‘சமயம்’ என்ற சொல்லைச் சேர்த்துப்பார்க்கமட்டுமே அறிந்த ஒருவரால் அதற்கு ‘ஆலோசனை வழங்க’ இயலாது.
அந்தக்காலத்தில் இந்தப் பெண்கள் செய்தவையும், என்னுடைய மாணவர்கள் இப்போது செய்கிறவையும் தலித் எதிர்ப்பைக் காவியமயமாக்குகிற, அல்லது, பாதிக்கப்பட்டவர் என்கிற பதக்கத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிடுகிற சவுகரியப் பகுதிக்கு அப்பாற்பட்டவை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதற்காக நாம் சந்தித்துப் பேசுகிற ஓர் இடம் வேண்டும். இது ஒரு மனநலப் பிரச்னை என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டோ, உணராமலோ தொடர்ந்து போராடுகிறார்கள்.
***
என்னுடைய பள்ளிநாட்களில் எனக்குத் தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருந்தது. அந்தப் பழக்கத்தின் பெரும்பகுதி, வரையறுக்க இயலாத ஒரு வெறுமையைக் கையாள்வதில் செலவிடப்பட்டது. அதற்குக் காரணம், வகுப்பறையிலும் வெளியிலும் வெற்றுணர்வின் தாக்கமே உண்டானது. என்னுடைய தாய், சாதி இந்துக்களுடைய பழக்கத்தைப் பார்த்து விரைவாகக் கற்றுக்கொள்வார்; ஆகவே, என்னை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்லும்படி என்னுடைய தந்தையிடம் அவர் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார், ‘அவளுக்கு ஏதாவது வேலை கொடுத்தால் போதும், எல்லாம் சரியாகிவிடும்’ என்று என்னுடைய தந்தை அதை அலட்சியப்படுத்தினார்.
நான் சும்மா இருப்பதைப் பார்த்தாலே, என்னுடைய தந்தை எனக்கு ஏதாவது சிறிய வீட்டு வேலைகளைத் தருவார், அவற்றைச் செய்யும்படி கட்டாயப்படுத்துவார். டீ போடச்சொல்வார், செடிகளுக்கு நீரூற்றச்சொல்வார், குளியலறையைத் தூய்மைப்படுத்தச்சொல்வார். நான் ஓர் ஆணாக இருந்திருந்தால், இதையெல்லாம் செய்யும்படி அவர் என்னிடம் சொல்லியிருக்கமாட்டார் என்று நான் நினைத்தேன்; இது எனக்குச் சினத்தை உண்டாக்கியது; அவரை வெறுத்தபடி நான் வளர்ந்தேன். என்னுடைய வளர் இளமைப் பருவத்தின் ஒரு பெரிய பகுதியை, என்னுடைய தந்தையிடம் சாதி இந்துவைப்போன்ற ஒரு வழியில் நடந்துகொண்டபடி நான் செலவிட்டேன் என்பதை இப்போது நான் புரிந்துகொள்கிறேன். ஏனெனில், அப்போது அவர் மனநல/உளவியல் மருத்துவத்தைத் தவிர்த்தது என்னைக் காப்பாற்றியது. ஒவ்வொருமுறை அவர் என்னை ஒரு வேலைக்குத் தூண்டியபோதும், என்னை என்னிடமிருந்து தொலைவுக்குத் தள்ளியிருக்கிறார். இதற்காக, நான் அவரிடம் நன்றியுடன் இருக்கிறேன்.
“நிறைய வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தால் மனச்சோர்வு விலகிவிடும்” என்று மக்கள் சொல்கிறார்கள்; அது ஒரு முட்டாள்தனமான பேச்சு, உண்மைதான். மனச்சோர்வு என்பது எப்படிப்பட்ட உணர்வு என்பதை அறியாத ஒரு தகுதிமிக்க இடத்திலிருந்து அது வருகிறது, உண்மைதான். ஆனால், அதைத்தான் என் தந்தை என்னிடம் சொன்னார்; அது அப்போது என்னைக் காப்பாற்றியது, இப்போதும் என்னைக் காப்பாற்றுகிறது.
சாதி இந்துவாக இருப்பது, மனநலப் பிரச்னையுடன் இருப்பதை எளிதாக்குகிறது. தலித் மக்களுக்கு மனநலப் பிரச்னை கட்டுப்படியாகாது. “மனச்சோர்வாக உணர/மனச்சோர்வைக் கொண்டிருக்க உனக்கு உரிமை உண்டு. ஒரு சிகிச்சையாளரிடம் போ, உன்னை நன்கு கவனித்துக்கொள்” என்று சொல்வது இதற்குப் பதிலாகாது. என்னைப் பொறுத்தவரை, இதற்கான பதில், என்னுடைய தந்தை எனக்குச் சொன்னதுதான், அம்பேத்கர் நமக்குக் காட்டியதுதான், “சிறந்து விளங்குவது என்பது அர்ப்பணிப்புணர்வின்மூலம் எட்டப்படுகிறது என்பதை நான் உணர்ந்துள்ளேன். என்னுடைய அர்ப்பணிப்புணர்வு என்பது, காட்டுக்குச் சென்று தவம் செய்வதில்லை. என்னைப் பொறுத்தவரை, அர்ப்பணிப்புணர்வு என்பது, துன்பத்தைத் தாங்கிக்கொள்கிற அதீத ஆற்றல், வேலைசெய்வதற்கான அதீத ஆற்றல்.”
***
“இதை வல்லுனர்களிடமே விட்டுவிடலாமா?” என்கிற கட்டுரையில் எழுத்தாளர் அருந்ததி ராய் கவனித்துப் பதிவுசெய்துள்ள ஒரு விஷயம், இந்திய மக்கள் இரண்டு ட்ரக்குகளில் நிரப்பப்பட்டுள்ளார்கள்; அவற்றில் ஒன்று பெரிய ட்ரக், இன்னொன்று சிறிய ட்ரக். “இந்த ட்ரக்குகள் இரண்டும் உறுதியான வகையில் வெவ்வேறு திசைகளில் சென்றுகொண்டிருக்கின்றன. சிறிய வண்டி, உலகின் உச்சத்துக்குப் பக்கத்தில் எங்கோ இருக்கிற ஒரு பளபளப்பான இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இன்னொரு வண்டி இருளில் உருகிக் கரைந்து மறைந்துவிடுகிறது.”
இந்தக் கட்டுரை 2002ல் எழுதப்பட்டது. 2019ல், ஒரு ட்ரக் உலகின் உச்சியைக் கடந்துவிட்டது; நிலாவில் இறங்கப்போகிறது/தொலைந்துவிட்டது, இன்னொன்று உருகிவிட்டது.
2017ல், தலித் பெண்கள் மாநாடொன்றில் அறைமுழுக்க நிரம்பியிருந்த பெண்களிடம் செயல்பாட்டாளர் ருத் மனோரமா கேட்டார், “கல்லூரி ஆலோசகர்கள், சிகிச்சையாளர்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே, ரோஹித் வெமுலா இறந்தபோது அவர்களெல்லாம் எங்கே சென்றிருந்தார்கள்?”
அந்தக் கேள்விக்கான பதில், அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இப்போதும் அது யாருக்கும் தெரியவில்லை.
***
அதேசமயம், ஒரு விஷயம் தெளிவாக இல்லை: புத்தாயிர இளைஞர்கள் என்றால் யார்? அந்தச் சொல்லைக் கேட்கும்போது நாம் யாரைக் கற்பனை செய்துகொள்கிறோம்? இந்தியாவில் ‘புத்தாயிரம்’ என்ற சொல், ‘வயதுவருதல்’ மற்றும் ‘மனநலப் பிரச்னை’ ஆகிய சொற்களைப்போல் ஓர் ஆபத்தான பகுதிக்குள் நுழையவுள்ளது; இங்கு சொற்களுக்கும் கருத்தாக்கங்களுக்கும் பூசி மெழுகப்படுகின்றன, அதன்பிறகுதான் அவற்றைப் பிறரால் அதிகம் அணுகக்கூடிய வகையில் பயன்படுத்த இயலுகிறது. இங்கு நாம் புத்தாயிர இளைஞர்கள் என்று சொல்லும்போது, உண்மையில் ஆங்கிலம் பேசுகிற, அரசியல்ரீதியில் சரியான சிந்தனைகளைக் கொண்டிருக்கிற ஆதிக்கச் சாதியினருடைய கூட்டத்தைத்தான் குறிப்பிடுகிறோமா?
அப்படியானால், தலித் புத்தாயிர இளைஞர்கள் எங்கே? மற்ற புத்தாயிர இளைஞர்களைப்போல் அவர்களும் மனநலப் பிரச்னைகளைப்பற்றி மனம் திறந்து பேசுகிறார்களா? மற்றவர்களைப்போலவே அவர்களுக்கும் மனநலப் பிரச்னைகள் வருகின்றனவா? இதற்கு விடை தேடி நாம் உளவியலையும் அதன் பயன்பாட்டையும் பார்த்தோமென்றால், நமக்கு அங்கு பல பதில்கள் இல்லை.
8 ஆண்டுகளுக்குமுன்னால், நான் ஒரு மாணவராக இருந்தபோது எனக்குத் தெரிந்திருந்த உளவியலுக்கும், இப்போது நான் மாணவர்கள்வழியாகத் தெரிந்துகொள்கிற உளவியலுக்கும் இடையே பெரிய வேறுபாடு இல்லை. இன்றைக்கு எனக்குத் தெரிகிற ஒரே வேறுபாடு, மனநலப் பிரச்னையைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலையாக ஆக்குவதில் வளர்ந்துவருகிற ஆர்வம்தான். நாட்டின் இயல்பு நிலையாகச் சாதி அமைவதைக் கையாள்வதற்காக, துடிப்பு அதிகமற்ற மந்தமான எதிர்ப்பின்மூலம் இது செய்யப்படுகிறது.
உளவியல் ஆலோசனைப் பழக்கவழக்கங்களிலும் சரி, பல நேரங்களில் வகுப்பறைகளிலும் சரி, சாதிக்கான நுண்ணுணர்வு ‘சமூகப்-பொருளாதார’ப் பின்னணிகளுடைய திரைக்குப் பின்னால் போகிறபோக்கில் சொல்லப்படுகிறது; இங்கு சாதியானது எளிதில் வகுப்பாகிவிடலாம். இந்தக் கட்டுரை சரியாகச் சுட்டிக்காட்டுவதுபோல், “சாதி என்பது பலவிதங்களில் இயங்கிவருகிறது, (இந்த) அமைப்புகளில் அதை அன்றாடம் காண இயலுவதை விதிமுறைகள், கட்டுப்பாடுகளால் அதிகம் தடுக்க இயலுவதில்லை.” சாதி அடிப்படையிலான பாரபட்சம் பழங்கதையாகிவிட்டது, இப்போதெல்லாம் வகுப்புவாதம்தான் உண்மையான பிரச்னை என்பது ஒரு நகர்ப்புற வகுப்பறையில் நஞ்சாகப் பரவியுள்ளது. பல நேரங்களில், இந்த வாதிடல்களில் சாதிபற்றிய பேச்சு நுழைகிற ஒரே நேரம், இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வலுவான உணர்வுகளை வெளிப்படுத்தவேண்டியிருக்கும்போதுதான்.
ஆக, மனநலப் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள உண்மையில் நமக்குக் கிடைப்பது, சாதியை நேருக்கு நேர் பாக்கும் முதுகெலும்பு இல்லாத ஒரு மேற்கத்தியக் கையேடாகும். கல்வித்துறையில் இப்போது பின்பற்றப்படுவதாகத் தோன்றுகிற உளவியல் மற்றும் ஆலோசனை வழங்குதலின் பிரச்னை, (வகுப்பறைகளில், விரிவுரைகளில், பணிவாழ்க்கைகளில்) அதை ஓர் அறிவியலாகச் சந்தைப்படுத்துதலில் அவர்களுக்கு இருக்கிற ஆவேசம்.
மனநலப் பிரச்னைகளை ஒரு ‘பொதுவான’ பிரச்னையாக விவரிக்கும் முயற்சி தொடர்ந்து நடந்துவருகிறது; சமூக எதார்த்தங்களால் உண்டாகக்கூடிய ஒன்றாக அதை அடையாளம் காண்பதுபற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. இந்தியா என்று வரும்போது, சாதி என்கிற எதார்த்தத்தைவிடப் பெரிய வேறு சமூக எதார்த்தம் ஏதாவது இங்கு இருக்கிறதா?
நகரத்துத் தலித் மாணவர்கள் சில நேரங்களில் தங்களுடைய அடையாளத்தை அறியாமல் வளர்கிறார்கள்; ஆனால், தங்களைப்பற்றியும், தங்களைப் பிறர் நடத்தும் விதத்தைப்பற்றியும், அதில் ஏதோ பெரிய தவறு இருக்கிறது என்கிற ஐயம் அவர்களுக்கு எப்போதும் இருக்கிறது. அம்பேத்கரைக் கண்டறிகிற, அல்லது, அம்பேத்கரைப் பின்பற்றும் நண்பர்களைக் கொண்டிருக்கிற அதிர்ஷ்டம் அவர்களுக்கு இருந்தால், தோற்றுப்போன அனைத்து நட்புகளும், சேற்றை வாரி இறைத்த நிகழ்வுகளும், கடந்தகாலத்தின் பதற்றங்களும் திடீரென்று தெளிவாகின்றன. பல நேரங்களில், தான் இப்போது இருக்கும் இடத்துக்குத் தான் தகுதியானவர் இல்லை என்று பிறரால் உணரச்செய்யப்பட்டபிறகுதான் ஒரு நகர்ப்புறத் தலித் தன்னுடைய அடையாளத்தைத் தெரிந்துகொள்கிறார்; இந்தச் செய்தியை அவர்களுக்குக் கொண்டுவருகிறவர்கள் எப்போதும் ‘சாதி இந்து’க்களாகவே (https://en.wikipedia.org/wiki/Varna_(Hinduism)) இருக்கிறார்கள்.
மற்றவர்களுடன் ஒரே வகுப்பறையில் அமர்ந்திருக்கிற ஒரு தலித் மாணவர், இதுதான் தன்னுடைய மனநலப் பிரச்னை என்று உணர்ந்தால், ஆலோசனை வழங்குதலைப்பற்றிய எந்த விவரிப்புக்கு அதைப் புரிந்துகொள்ளும் திறமை உண்டு? அதே நேரம், ஒரு சாதி இந்து மாணவர் தான் மனச்சோர்வு அடைந்திருப்பதுடன், அதை அடையும் உரிமையும் தனக்குண்டு என்று நம்பும்படி வழிநடத்தப்பட்டால், இந்த உரிமை எப்போதெல்லாம் சாதிச் சலுகையை எதிர்கொள்ளச்செய்யப்படுகிறது?
கல்வித்துறையிலுள்ள உளவியலாளர்கள்/ஆலோசகர்களிடம் இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை; அதைவிட மோசம், அவர்கள் இதைக் கேட்கவேண்டும் என்ற அக்கறைகூட அவர்களுக்கு இல்லை. இவ்வளவு விஷயங்களை அவர்களால் புரிந்துகொள்ளக்கூட இயலாது. மக்களைச் சமநிலைப்படுத்துவது அல்லது அப்படிப்பட்ட ஒரு மாயத்தோற்றத்தையாவது உண்டாக்குவது என்கிற விவரிப்பு எதற்கேனும் தரப்பட்டிருக்கிறது என்றால், அது ‘மன நலப் பிரச்னை’க்குதான். அதன் பார்வையில், எல்லாரும் சமம்.
***
ட்ரெவர் நோவாவுடனான Daily Show என்ற அன்றாட நிகழ்ச்சியில், ஓர் ஆப்பிரிக்கச் சிறுமிக்கு மனச்சோர்வு இருக்கிறது என்பதை அவருக்குப் புரியவைக்க முயன்ற நிகழ்வைப்பற்றி நமக்குச் சொல்கிறார் ஓபரா. ஆனால், அந்தப் பெண் அதை ஏற்றுக்கொள்ளவில்லை, “எனக்கு மனச்சோர்வு வந்திருக்க வாய்ப்பில்லை; நான் ஆப்பிரிக்கன் அல்லவா?” ஆப்பிரிக்கப் பெண்களுக்கும் மனச்சோர்வு வரலாம் என்பதை அவர்களுக்குப் புரியவைக்கத் தான் முயன்றதாகப் பின்னர் குறிப்பிட்டார் ஓபரா.
இதைப் பார்த்தபோது, என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த மூத்த பெண்களைப் புரிந்துகொள்ள ஒரு மொழி எனக்குக் கிடைத்தது. இங்கு நாம் சொல்லவரும் விஷயம், நாமும் மனச்சோர்வை அடையலாம் என்பதில்லை. என்னுடைய குடும்பத்திலிருக்கிற மூத்த பெண்கள் தங்களுடன் நீண்ட சண்டைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள், நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள், தங்களைச் சுற்றியுள்ள உலகத்துடன் இன்னும் நீண்ட சண்டைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள், நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள், இதற்கு அவர்களுக்கு எந்தவிதமான விவரிப்போ நுணுக்கவுணர்வோ (பாராட்டப்படுகிற சாதி இந்துச் சொற்கள்) தேவைப்படவில்லை. இதை நாம் அங்கீகரிக்கவேண்டும் என்பதுதான் இங்கு முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
தலித் பெண்களால் மன நல வல்லுனர்களை அணுக இயலுவதில்லை என்பது அறிவுக்கு மிகவும் ஏற்புடைய ஒரு தகவலாக இருந்தாலும், நாம் அதையும் முன்வைத்து வாதிடவில்லை; சாதி இந்துக்களுடைய ஓர் உலகில் எந்த அளவு மனநலனும் தங்களைக் காப்பாற்றாது என்பதைத் தெரிந்துகொண்டபிறகு, அல்லது, அதைத் தெரிந்துகொண்டதன்மூலம் ஏற்படுகிற மௌனத்தைத் தலித் பெண்கள் தாங்கிக்கொண்டு முன்னேறுகிறார்கள் என்பதைத்தான் நாம் பேசுகிறோம். நாம் இதுவரை பேசியவற்றிலிருந்து கற்கவேண்டிய பாடம், நீங்கள் ஒரு சாதி இந்து உலகில் வாழ்கிறீர்கள் என்றால், நீங்கள் ஏற்கெனவே இயல்பாக மனநலப் பிரச்னை கொண்டவர் என்பதைப் புரிந்துகொள்வதுதான், நீங்கள் சாதி இந்துவாக இருந்தாலும் சரி, சூத்திரராக இருந்தாலும் சரி, தலித்தாக இருந்தாலும் சரி, இது உண்மை.
இதற்கு எந்த ஆலோசனை அல்லது சிகிச்சை உதவலாம்?
உங்களுடைய வேலையை இன்னொருவர் செய்வார், அதற்காக நீங்கள் பணம் செலுத்தவேண்டும், அத்துடன் மருந்துகளையும் உட்கொள்ளவேண்டும் என்று நம்புவது சாதி இந்துக்களுடைய பலமுறை நிரூபிக்கப்பட்ட செயல்முறையாகும்.
‘நான் மனச்சோர்வு அடைய இயலாது. ஏனெனில், நான் ஒரு தலித்’ என்ற சொற்றொடரைத் திருத்தவேண்டியதில்லை, தூசுதட்டிப் பெருமையுடன் அணியவேண்டியது என்று என்னுடைய சாதியைச் சேர்ந்த பெண்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டுள்ளேன். என்னுடைய தந்தையுடைய வளர் இளமைப் பருவமும் இந்தவிதமாகதான் கையாளப்பட்டது. உள்ளே மிக ஆழமாக விழுந்துவிடாமல் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதிலேயே தன்னுடைய மாணவப் பருவத்தின் பெரும்பாலான நாட்களைச் செலவிட்டார் அவர். ஒருவர் தன்னுடைய இளமைப்பருவம் முழுவதையும் கவனமாகப் பேசுவதில், பிறரைக் காயப்படுத்திவிடக்கூடாது, தன்மீது கவனத்தை ஈர்த்துவிடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருப்பதில், தன்னுடைய உணவு எங்கிருந்து வரப்போகிறது என்று சிந்திப்பதிலேயே செலவிட்டால், மனச்சோர்வுக்கு நேரம் இருப்பதில்லை. தான் கொல்லப்பட்டுவிடக்கூடாது, நசுக்கப்பட்டுவிடக்கூடாது, ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாது என்பதிலேயே ஒருவருடைய கவனம் முழுவதும் இருந்தால், அதுவே அவருடைய மனச்சோர்வாகிவிடுகிறது.
நான் வளர்ந்துகொண்டிருந்தபோது, என்னுடைய தந்தை என்னுடைய மனநிலைகளை எரிச்சலுடன் கவனித்தார்; நான் நன்றியுணர்வைக் காட்டாமல் உணவை உண்டால்கூட மிகவும் சினம் கொண்டார். தான் வளர்ந்தபோது தனக்குக் கிடைக்காத அனைத்தையும் அவர் எங்களுடைய வீட்டில் நிரப்பினார்; அதேசமயம், எங்களைச் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிடக்கூடாது என்பதில் கூடுதல் அக்கறை காட்டினார். அவர் தொடர்ச்சியாக, சில நேரங்களில் தீவிரத்துடன், அதாவது நாங்கள் எப்படி அமர்கிறோம், தூங்குகிறோம், சாப்பிடுகிறோம், பல் துலக்குகிறோம், படிக்கிறோம் போன்ற எங்களுடைய பழக்க வழக்கங்களில் எங்களுடைய கவனத்தை மீண்டும் செலுத்தும்படி கூறுவார்.
தலித் குழந்தைவளர்ப்பு என்பது அதிகம் ஆராயப்படாத ஒரு விஷயம். தங்களுடைய குழந்தைகளை மனச்சோர்வு/பதற்றம் கொண்டவர்களாகவும், அதைச் சரிசெய்யவே இயலாது என்றும் நம்பச்செய்வதில் தீவிரமாக இருக்கிற ஓர் உலகத்தில் குழந்தைகளை வளர்ப்பது தலித் பெற்றோருக்கு அச்சம் தருவதாக இருக்கவேண்டும். அவர்கள் நகரங்களுக்கு வரும்போது, பல நேரங்களில் அவர்கள் பின்பற்றுவதற்கு முன்னோடிகள் இல்லை, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் என்ன சொல்வது, பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களில் எப்படி நடந்துகொள்வது, உங்கள் குழந்தை எப்போதும் சோகமாகத் தோன்றினால் அவரை எங்கு அழைத்துச்செல்வது போன்றவற்றைச் சொல்லித்தருகிற பாடப்புத்தகமோ கையேடோ அவர்களுக்குக் கிடைப்பதில்லை.
அவர்கள் செய்யக்கூடிய ஒரே விஷயம், சாதி இந்துக்கள் எப்படிக் குழந்தைகளை வளர்க்கிறார்கள் என்பதைப் பார்த்துப் பிரதியெடுப்பதுதான். அவர்களால் அதைச் செய்ய இயலாதபோது, அவர்கள் உள்ளுணர்வைதான் நம்பவேண்டும் (பெரும்பாலான குழந்தைவளர்ப்புகளில் இது உண்மை). ஆனால், இது அச்சம் தருகிற ஒரு விஷயம். ஏனெனில், அவர்கள் நம்மைப் போட்டியிடாமலிருக்கத் தயார்செய்கிறார்கள், சாதி இந்துக்களுடைய உலகத்தில் நாம் தப்பிப்பிழைத்தாலே போதும் என்று சொல்லித்தருகிறார்கள். இதற்காக அவர்கள் நம்மைச் சாதியிலிருந்து மறைத்துப் பாதுகாக்கிறார்கள். நாம் யார் என்பதையோ, நாம் யார் என்று உலகம் நினைக்கிறது என்பதையோ அவர்கள் நமக்குச் சொல்லமாட்டார்கள். தங்களுடைய மிகச்சிறந்த வடிவத்தை அவர்கள் நமக்குத் தருகிறார்கள், உலகமும் அதேபோல் தரும் என்று வேண்டிக்கொள்கிறார்கள்.
***
ஒரு பிராமணப் பூசாரி என்னுடைய பாட்டியின் கையில் தன்னுடைய ஆள்காட்டி விரலால் குத்திச் சில மந்திரங்களைச் சொன்னாராம்; உடனே நாங்கள் GSB (கௌட் சரஸ்வத் பிராமணர்) ஆகிவிட்டோமாம். இதைச் சொல்லும்போது என்னுடைய பாட்டி சிரிப்பதில்லை. அவருடைய கணவர், தான் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பாக, அவர்களுடைய படுக்கையறைச் சுவரில் தன்னுடைய மரணத் தேதியை எழுதியதாகச் சொல்வார் என்னுடைய பாட்டி. அப்போதும் அவர் சிரிப்பதில்லை. உண்மையில், நான் அவரை அறிந்திருந்த காலகட்டம் முழுவதும், தான் உண்மையாக நம்பாத எதையும் அவர் சொன்னதில்லை.
ஆனால், சென்ற வாரம் என்னுடைய பாட்டி எங்களுடன் வாழ வந்தபோது, என்னுடைய பாட்டிக்கு மனநிலை சரியில்லை என்று என் தாய் என்னிடம் சொன்னார். அவர் மணிக்கணக்காகத் தனக்குத்தானே பேசிக்கொள்கிறாராம், கை நிறையச் சர்க்கரையை எடுத்துக்கொண்டு ஒவ்வோர் அறையாகச் செல்கிறாராம், தண்ணீர் குடிப்பதுபோல் அதைச் சாப்பிடுகிறாராம், மருந்து சாப்பிட்டுவிட்டதாகப் பொய் சொல்கிறாராம், மக்கள் தன்னுடைய பணத்தைத் திருடியதாகவும், அதே நேரத்தில் கடன் வாங்கியதாகவும் சொல்கிறாராம், இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று மாற்றாகச் சொல்லக்கூடியவை என்று நினைக்கிறாராம்.
‘மனச்சோர்வு வந்தவர்கள் அப்படிதான் நடந்துகொள்வார்கள்’ என்கிறார் என்னுடைய தாய்.
என்னுடைய பாட்டி தனக்குத்தானே என்ன பேசிக்கொள்கிறார் என்று நான் என்னுடைய தாயைக் கேட்டேன். வயதான உறவினர்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், கணவர் போன்றோரைப்பற்றிக் கிசுகிசுப்பாகத் திட்டுகிறாராம்; அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்கிறாராம். பின்னர், அவர் ஒரு தாமதமான முன்னுரையையும் சேர்த்துக்கொண்டார், “அவர் மிகவும் கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார். அப்பா வாழும்போதும் சரி, அப்பா இறந்தபிறகும் சரி. அவர் எங்களைத் தனியாகதான் வளர்த்தார்.”
என்னுடைய பாட்டி இப்படி நடந்துகொள்வதற்கு எந்த மருந்தும் இல்லை என்பதைத் தனக்கும் எனக்கும் நினைவுபடுத்திக்கொள்வதற்கான என் தாயுடைய வழி அது.
வேறோரிடத்தில், சாதி எப்படி நம்முடைய உடல்களில் வாழ்கிறது, என்ன செய்கிறது என்பதைப்பற்றி நான் எழுதியுள்ளேன். மனச்சோர்வைப்போலவே, இதுவும் இதன் அறிகுறிகளும் தகுதிபெற்ற ஒரு கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால், மனச்சோர்வைப்போல் சாதியைக் கையாள்வதற்குச் சிகிச்சையாளர் இல்லை; மருந்துகளைப் பரிந்துரைக்க இயலாது.
என்னுடைய பாட்டி கோயில்களுக்குச் செல்லவேண்டும் என்று மிகவும் விரும்பியிருப்பார், ஆனால், அவருக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்காது, இதை என்னுடைய பாட்டி ஒப்புக்கொள்ளமாட்டார். அதற்குப்பதிலாக, “நிலைமை இப்போது எவ்வளவோ மாறிவிட்டது” என்பார் அவர். ஒருகாலத்தில் அவருடைய மாமியார் கோயிலுக்குச் சென்றபோது, பூசாரிகள் தலைமுடியைப் பிடித்து இழுத்து வெளியேற்றினார்கள், அவர் கோயிலுக்கு அருகில் வந்தாலே கல்லால் அடிப்பதற்காக மக்கள் காத்து நின்றார்கள் என்பார். இப்போது நிலைமை அப்படியில்லை என்றும், அதற்காகத் தான் நன்றியுடன் இருப்பதாகவும் அவர் சொல்வார்.
என்னுடைய மாணவர்கள் சிலர், தாங்கள் தலித் என்பதை மெல்லக் கண்டுகொள்கிறார்கள், அந்த அதிர்ச்சியைக் கையாள்வது அவர்களுக்கு மிகக் கடினமாக இருக்கிறது. ஒரு நல்ல வாழ்க்கையை அனுபவிப்பதை எண்ணி அவர்கள் குற்றவுணர்ச்சி அடைகிறார்கள்; இதைத் தெரிந்துகொண்டதன்மூலம், தங்களைவிட அதிகத் துன்பத்தை அனுபவிக்கும் தலித் மக்களைப்பற்றி அவர்கள் எந்நேரமும் சிந்திக்கிறார்கள், தாங்கள் எதற்கும் தகுதியற்றவர்கள் என்று இது அவர்களை உணரச்செய்கிறது.
உங்களைவிடக் கருணைக்கு அதிகத் தகுதியுள்ள ஒருவர் எப்போதும் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் வாழ்ந்தால், அது ஒருவிதமான அதிர்ச்சியாகிறது; சாதி என்று சொன்னாலே, அத்துடன் ‘சமயம்’ என்ற சொல்லைச் சேர்த்துப்பார்க்கமட்டுமே அறிந்த ஒருவரால் அதற்கு ‘ஆலோசனை வழங்க’ இயலாது.
அந்தக்காலத்தில் இந்தப் பெண்கள் செய்தவையும், என்னுடைய மாணவர்கள் இப்போது செய்கிறவையும் தலித் எதிர்ப்பைக் காவியமயமாக்குகிற, அல்லது, பாதிக்கப்பட்டவர் என்கிற பதக்கத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிடுகிற சவுகரியப் பகுதிக்கு அப்பாற்பட்டவை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதற்காக நாம் சந்தித்துப் பேசுகிற ஓர் இடம் வேண்டும். இது ஒரு மனநலப் பிரச்னை என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டோ, உணராமலோ தொடர்ந்து போராடுகிறார்கள்.
***
என்னுடைய பள்ளிநாட்களில் எனக்குத் தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருந்தது. அந்தப் பழக்கத்தின் பெரும்பகுதி, வரையறுக்க இயலாத ஒரு வெறுமையைக் கையாள்வதில் செலவிடப்பட்டது. அதற்குக் காரணம், வகுப்பறையிலும் வெளியிலும் வெற்றுணர்வின் தாக்கமே உண்டானது. என்னுடைய தாய், சாதி இந்துக்களுடைய பழக்கத்தைப் பார்த்து விரைவாகக் கற்றுக்கொள்வார்; ஆகவே, என்னை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்லும்படி என்னுடைய தந்தையிடம் அவர் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார், ‘அவளுக்கு ஏதாவது வேலை கொடுத்தால் போதும், எல்லாம் சரியாகிவிடும்’ என்று என்னுடைய தந்தை அதை அலட்சியப்படுத்தினார்.
நான் சும்மா இருப்பதைப் பார்த்தாலே, என்னுடைய தந்தை எனக்கு ஏதாவது சிறிய வீட்டு வேலைகளைத் தருவார், அவற்றைச் செய்யும்படி கட்டாயப்படுத்துவார். டீ போடச்சொல்வார், செடிகளுக்கு நீரூற்றச்சொல்வார், குளியலறையைத் தூய்மைப்படுத்தச்சொல்வார். நான் ஓர் ஆணாக இருந்திருந்தால், இதையெல்லாம் செய்யும்படி அவர் என்னிடம் சொல்லியிருக்கமாட்டார் என்று நான் நினைத்தேன்; இது எனக்குச் சினத்தை உண்டாக்கியது; அவரை வெறுத்தபடி நான் வளர்ந்தேன். என்னுடைய வளர் இளமைப் பருவத்தின் ஒரு பெரிய பகுதியை, என்னுடைய தந்தையிடம் சாதி இந்துவைப்போன்ற ஒரு வழியில் நடந்துகொண்டபடி நான் செலவிட்டேன் என்பதை இப்போது நான் புரிந்துகொள்கிறேன். ஏனெனில், அப்போது அவர் மனநல/உளவியல் மருத்துவத்தைத் தவிர்த்தது என்னைக் காப்பாற்றியது. ஒவ்வொருமுறை அவர் என்னை ஒரு வேலைக்குத் தூண்டியபோதும், என்னை என்னிடமிருந்து தொலைவுக்குத் தள்ளியிருக்கிறார். இதற்காக, நான் அவரிடம் நன்றியுடன் இருக்கிறேன்.
“நிறைய வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தால் மனச்சோர்வு விலகிவிடும்” என்று மக்கள் சொல்கிறார்கள்; அது ஒரு முட்டாள்தனமான பேச்சு, உண்மைதான். மனச்சோர்வு என்பது எப்படிப்பட்ட உணர்வு என்பதை அறியாத ஒரு தகுதிமிக்க இடத்திலிருந்து அது வருகிறது, உண்மைதான். ஆனால், அதைத்தான் என் தந்தை என்னிடம் சொன்னார்; அது அப்போது என்னைக் காப்பாற்றியது, இப்போதும் என்னைக் காப்பாற்றுகிறது.
சாதி இந்துவாக இருப்பது, மனநலப் பிரச்னையுடன் இருப்பதை எளிதாக்குகிறது. தலித் மக்களுக்கு மனநலப் பிரச்னை கட்டுப்படியாகாது. “மனச்சோர்வாக உணர/மனச்சோர்வைக் கொண்டிருக்க உனக்கு உரிமை உண்டு. ஒரு சிகிச்சையாளரிடம் போ, உன்னை நன்கு கவனித்துக்கொள்” என்று சொல்வது இதற்குப் பதிலாகாது. என்னைப் பொறுத்தவரை, இதற்கான பதில், என்னுடைய தந்தை எனக்குச் சொன்னதுதான், அம்பேத்கர் நமக்குக் காட்டியதுதான், “சிறந்து விளங்குவது என்பது அர்ப்பணிப்புணர்வின்மூலம் எட்டப்படுகிறது என்பதை நான் உணர்ந்துள்ளேன். என்னுடைய அர்ப்பணிப்புணர்வு என்பது, காட்டுக்குச் சென்று தவம் செய்வதில்லை. என்னைப் பொறுத்தவரை, அர்ப்பணிப்புணர்வு என்பது, துன்பத்தைத் தாங்கிக்கொள்கிற அதீத ஆற்றல், வேலைசெய்வதற்கான அதீத ஆற்றல்.”
***
“இதை வல்லுனர்களிடமே விட்டுவிடலாமா?” என்கிற கட்டுரையில் எழுத்தாளர் அருந்ததி ராய் கவனித்துப் பதிவுசெய்துள்ள ஒரு விஷயம், இந்திய மக்கள் இரண்டு ட்ரக்குகளில் நிரப்பப்பட்டுள்ளார்கள்; அவற்றில் ஒன்று பெரிய ட்ரக், இன்னொன்று சிறிய ட்ரக். “இந்த ட்ரக்குகள் இரண்டும் உறுதியான வகையில் வெவ்வேறு திசைகளில் சென்றுகொண்டிருக்கின்றன. சிறிய வண்டி, உலகின் உச்சத்துக்குப் பக்கத்தில் எங்கோ இருக்கிற ஒரு பளபளப்பான இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இன்னொரு வண்டி இருளில் உருகிக் கரைந்து மறைந்துவிடுகிறது.”
இந்தக் கட்டுரை 2002ல் எழுதப்பட்டது. 2019ல், ஒரு ட்ரக் உலகின் உச்சியைக் கடந்துவிட்டது; நிலாவில் இறங்கப்போகிறது/தொலைந்துவிட்டது, இன்னொன்று உருகிவிட்டது.
2017ல், தலித் பெண்கள் மாநாடொன்றில் அறைமுழுக்க நிரம்பியிருந்த பெண்களிடம் செயல்பாட்டாளர் ருத் மனோரமா கேட்டார், “கல்லூரி ஆலோசகர்கள், சிகிச்சையாளர்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே, ரோஹித் வெமுலா இறந்தபோது அவர்களெல்லாம் எங்கே சென்றிருந்தார்கள்?”
அந்தக் கேள்விக்கான பதில், அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இப்போதும் அது யாருக்கும் தெரியவில்லை.
***

ஆசிரியர் குறிப்பு: விஜேதா குமார் பெங்களூரைச் சேர்ந்த ஆசிரியர், எழுத்தாளர். தேநீர் அருந்துவதிலும், ட்விட்டரைப் படித்துச் சிரிப்பதிலும் அவர் மிகுந்த நேரத்தைச் செலவிடுகிறார். அவர் rumlolarum.com -ல் எழுதிவருகிறார்.
This piece is part of a series supported by India Alliance.